இன்று மார்ச் 22 உலக தண்ணீர் தினம்- இயற்கை நீரை பாதுகாப்போம் உலக தண்ணீர் தினமான இன்று நீரை வீணாக்காமல் பாதுகாப்போம்
மனித குலத்திற்கு ஆதாரமாக விளங்கும் நீர்வளங்களை பாதுகாப்பதுடன், தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தினமானது ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்படும். இந்த ஆண்டு 'இயற்கை தண்ணீர்' என்பதை மையமாக கொண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இயற்கை தண்ணீரை பாதுகாத்தால் மட்டுமே சுத்தமான நீரை உபயோகிக்க முடியும்.
பூமியில் வாழும் அனைத்து உயரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு தண்ணீர் அவசியம். இதன் முக்கியத்துவத்தை அறிந்த வள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என்கிறார். தண்ணீர் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1993 முதல் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தண்ணீர்: பருவநிலை மாற்றம் என்பது இந்தாண்டு மையக்கருத்து.
பூமியில் நிலப்பகுதி 30 சதவீதம். மீதமுள்ள 70 சதவீதம் நீர்பரப்பு தான். ஆனால் இந்த70 சதவீத நீர் பரப்பளவில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடிநீர் உள்ளது. இதிலும் குறி்ப்பிட்ட சதவீதம் பனிக்கட்டிகள் உள்ளன.
மீதி தண்ணீரை தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் உயரும் வெப்பநிலை பருவநிலை மாற்றம் காடுகளின் பரப்பளவு குறைதல், மணல் கொள்ளை, போன்ற பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. மூன்றாம் உலகப்போர் என ஒன்று வந்தால் அது தண்ணீருக்காக தான் இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தண்ணீரை மிக சிக்கனமாக செலவழிக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இருக்கும். இதை அனைவரும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
* உலகில் மூன்றில் ஒருவர் பாதுகாப்பற்ற குடிநீரை பருகுகிறார்.
* வரும் 2040ல் மின்சார தேவை 25 சதவீதம் அதிகரிக்கும். இதனால் தண்ணீரின் தேவையும் 50 சதவீதம் அதிகரிக்கும்.
* உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வுக்குள் கட்டுப்படுத்தினால் தண்ணீர் பற்றாக்குறையை 50 5சதவீதம் தடுக்க முடியும்
* உலகில் 74 கோடி பேர் அத்தியாவசிய தேவைக்கான தண்ணீர் இல்லாமல் பாதி்க்கப்பட்டுள்ளனர். போர்களில் இறப்பவர்களை விட பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.
* உலகில் 80 சதவீத நீர் மறு சுழற்சி செய்யப்படாமல் வீணாகிறது.
* வரும் 2050 ம் ஆண்டுக்குள் 507 கோடி பேர் வசிக்கும் பகுதிகளில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு மாதம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து உலக நீர் தினமான இன்று தண்ணீரை வீண் செய்யாமல், மாசுபடுத்தாமல், சிக்கனமாக பயன்படுத்துவோம் என உறுதி ஏற்போம்.
நீரின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்வதற்காக கடந்த 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு காரணம்
அதிகரித்து வரும் தொழிற்ச்சாலைகள்
இயற்கை வளங்களை சுரண்டல்
தண்ணீருக்கான பயன்பாடு அதிகரித்தல்
இவைகள் தான் இந்த காலக்கட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
உலக நீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது எப்போது
கடந்த 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ஐ.நா பொதுச் சபையின் மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் நீர் தினம் கடைப்பிடிப்பது பற்றிய யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று நீர் தினம் என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. 1993 முதல் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நீரின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்வதற்காக கடந்த 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக நீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக நீர் தினம்
நீர் உயிரின் ஆதாரம்
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு நீர் மிக அவசியம். இன்று மனிதனுடைய அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பெற்றுள்ளது. அந்தளவுக்கு நீரின் தேவை இன்றைக்கு அதிகரித்துள்ளது. நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
உணவு உடை இல்லை என்றாலும் அதனை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் நீர் இல்லை என்றால் அதனை உற்பத்தி செய்யவே முடியாது. நீர் உயிரின் ஆதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகில் உயிருள்ள ஜீவன்கள் இருக்காது.
நீரின் முக்கியதுவத்தை உணர்த்தும் வள்ளூவர்
திருவள்ளூவர் குறள் முலம் நீரின் பெருமையை அன்றே சொல்லி இருப்பார்.
“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு”
என நீரின் முக்கியதுவத்தை அன்றே சொல்லி இருப்பார். அக்குறளில் சொல்லவருவது என்னவென்றால், நீர் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் நிலை பெற்று வாழ முடியாது. அந்த நீரை உலகத்திற்கு வழங்குகின்ற மழை இல்லையென்றால் இவ்வுலகில் எந்த ஜீவராசிகளும் வாழ்ந்திட முடியாது என்பது தான்.
இதே போல நீரீன் அவசியத்தை மையமாக கொண்டு பல திரைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. இப்படி நீரின் அவசியத்தை பாடல் மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும், இது போன்ற தினம் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்திதான் வருகின்றனர்.
கண்களை குளமாக்கும் வரிகள்
அதர்வா கயல் ஆனந்தி நடித்த சண்டிவீரன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் கேட்போரை கண்கலங்க செய்யும் அளவுக்கு நீரின் முக்கியதுவத்தை அழகாக வரிகளின் மூலம் உணர்த்தி இருப்பார்கள். அதில் சில வரிகள்,
“தாய்ப்பாலும் தண்ணீரும்
ஒன்னாதான் இருந்துச்சு
விலை இல்லாம கெடந்துச்சு
ஆனா இப்போ எல்லாமே
தலைகீழா போனுச்சு
தடம் மாறி நின்னுச்சு
நிலவுல தண்ணீரு
இருக்கானு தேடுறோம்.
ராக்கெட்டை ஏவுறோம்
குடிநீரை பூமியில
வியாபாரம் பண்ணுறோம்”
இந்த பாடலில் சொல்லுவது போல தற்போது தண்ணீரை வியாபாரம் தான் செய்து வருகிறோம். தற்போது குடிநீர் மட்டும் தான் வியாபாரம் செய்து வருகிறோம்.பிற்காலத்தில் அனைத்திற்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை கூட வரலாம்.
உலக நீர் தினம்
எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து உலக நீர் தினமான இன்று தண்ணீரை வீண் செய்யாமல், மாசுபடுத்தாமல், சிக்கனமாக பயன்படுத்துவோம் என உறுதி ஏற்போம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.