பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிர்த்த மனு தள்ளுபடி




தஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை சேர்ந்த வீரசேனன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையம் நாடியம்மன் கோயில் மேற்கு தெற்கு பகுதியில் 3. 67 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், காவல் நிலையம், பதிவாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. பொது மக்களுக்கு பயனுடையதாக உள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்தை புதிய இடத்தில் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நரியம்பாளையம் பகுதியில் அமைய உள்ள இந்தப் பகுதி ஏற்கனவே கோடைகால தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் தண்ணீர் தேக்கி வைக்க அந்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

பட்டுக்கோட்டையின் நகரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் குறுகலான சாலையில் உள்ளது. இது பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை. எனவே இந்த பணிக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் விசாரித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், நகராட்சி வழக்கறிஞர் ஜெய் வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகி பொதுமக்கள் நலன் கருதி வெளியூர் பேருந்து நிலையம் அமைக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments