தேங்கிய மழை நீர், கூடவே சாக்கடையும்.. வெளியில் கால் வைக்க முடியலை.. குமுறும் கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் மக்கள்! கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்!! கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்!!!





மழை நீர் ஒரு பக்கம் தேங்கிக் கிடக்கும் நிலையில் மறுபக்கம் சாக்கடையும் அதனுடன் கலந்து வருவதால் மக்கள் பெரும் எரிச்சலுக்குள்ளாகியுள்ளனர். அவுலியா நகர் முழுவதும் மழையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒரே நாளில் மக்களை முடக்கிப் போட்டு விட்டது மழை. தெருக்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. தெருக்களில் மக்கள் வீடுகளை விட்டு வர முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. 

மழை நீர் மற்றும் சாக்கடை நீரால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மழை நீர் தேங்கிக் கிடப்பதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. காரணம், அதில் கலந்து வரும் சாக்கடையால். 

நாட்டாணிபுரசக்குடி கிராமப் பஞ்சாயத்துத்துக்குட்பட்ட அவுலியா நகர் பகுதியில் இருந்து ஹாஜா கூறியதாவது, கன மழையால் எங்களது பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. கூடவே சாக்கடையும், குப்பையும் கலந்து வருவதால் டெங்கு உள்ளிட்டை பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இங்கு முறையான கழிவு நீர், மழை நீர் வடிகால் வசதி இல்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும் மேலும் பல முறை அரசு சார்ந்த நிர்வாக கதவுகளை தட்டியும் எந்த பலனும் இல்லை என்று குமுறுகிறார். மேலும் எங்கள் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் முறையாக இல்லாமல் இருப்பதுடன் சில மாதங்களுக்கு முன்னர் ஒன்றிய கவுன்சிலர் அய்யா ரமேஷ் அவர்கள் எங்கள் பகுதியில் சுமார் 185.5m அளவில் புதிதாக கழிவுநீர் வாய்க்கால் அமைத்து கொடுத்தார். ஆனால் அவை சரியான முறையில் கட்டப்படாததால் அதில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. சில மாதங்களில் அவுலியா நகர் பகுதியில் புதிதாக கழிவு நீர் வாய்க்கால் கட்டப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள் எனவே அதனை சரியான முறையில் கழிவுநீர் வெளியேறும் வகையில் அமைத்து தர வேண்டும் என எங்களின் கோரிக்கையாக உள்ளது.  

மேலும் ஊராட்சி நிர்வாகம் எங்களை புறக்கணித்து வருவதாகவும், ஆகவே மாவட்ட ஆட்சியர் எங்கள் பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையை சரி செய்யக் கோரி கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் தோழமைக்கட்சி நண்பர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கடந்த ஜனவரி மாதம் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments