பழுதாகி நடுவழியில் நிற்கும் அவலம்: ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய வாகனம் வழங்க கோரிக்கைஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டு தீர்மான விளக்க பேரவை கூட்டம் ஆவுடையார்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் காமாட்சி தலைமை தாங்கினார். மாநாட்டில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைேவற்ற வேண்டும்.
இதன்மூலம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து விவசாயம் நடைபெறும். ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்கள் மழையால் சேதம் அடைந்தது. மேலும், ஒரு சில கிராமங்கள் தவிர மற்ற கிராமங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீத இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். 

ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீயணைக்கும் வாகனம் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. இதனால் தீ விபத்து ஏற்பட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தீயணைப்பு நிலையத்திற்கு புதிய வாகனம் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments