ஆவுடையார்கோவில் பகுதியில் விபத்தை தடுக்க 20 இடங்களில் தானியங்கி ஒளிரும் எச்சரிக்கை விளக்கு கம்பங்கள் அமைப்பு
ஆவுடையார்கோவில் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் 20 இடங்கள் கண்டறியப்பட்டு தானியங்கி ஒளிரும் எச்சரிக்கை விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆவுடையார்கோவில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சுந்தர்ராஜ் கூறுகையில், விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஆவுடையார்கோவில் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகள், சாலை சந்திப்பு, குறுகிய வளைவுகளில் சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி ஒளிரும் எச்சரிக்கை விளக்கு கம்பம் நடப்பட்டுள்ளன. இதன்மூலம் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குவர் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments