இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பிக்கலாம் வரும் 31-ந் தேதி கடைசி நாள்




இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணையவழியாக விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 26.12.2002 முதல் 26.06.2006 வரையான காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். இத்தேர்வு வருகிற மே மாதம் 20-ந் தேதி முதல் இணைய வழியில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான கல்வி தகுதி 12-ம் வகுப்பு அல்லது 3 ஆண்டு பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும். மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதள மூலம் அறியலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

இத்தேர்வுக்கு புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments