அறந்தாங்கி ரயில் நிலையத்தில் ரயில்கள் வந்து செல்லும் கிழமை / நேர அட்டவணை!








அறந்தாங்கி ரயில் நிலையத்தில் ரயில்கள் வந்து செல்லும் கிழமை / நேர அட்டவணை அறந்தாங்கி ரயில் நிலையம் திருவாரூர் காரைக்குடி பாதையில் உள்ளது .

ரயில் போக்குவரத்து

ஒரு நாட்டினுடைய வளர்ச்சியில் போக்குவரத்து மிகவும் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. சாலைப் போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

இதில், ரயில்வே போக்குவரத்து மூலமாக மக்கள் எளிதில் பாதுகாப்பாக குறைந்த செலவில் பயணம் செய்ய முடியும். கழிப்பறை வசதி மற்றும் வசதியான படுக்கை வசதி இருப்பதால், நோயாளிகள், பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பயணம் செய்ய வசதியாக இருக்கிறது.
அதுபோல சரக்கு போக்குவரத்துகள் குறைந்த செலவில் நீண்ட தூரத்திற்கு அதிக அளவில் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கிறது.

ரயில் போக்குவரத்தினால் சாலை விபத்துகள் குறையவும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவும் அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, ரயில் போக்குவரத்தை இந்தியாவில் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் அறிஞர்களும், பொதுமக்களும் விரும்புகிறார்கள்.

திருவாரூர் - காரைக்குடி பாதையின் வரலாறு 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பர்மா (தற்போதைய மியான்மர்) நாட்டில் காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட செட்டிநாட்டு பகுதிகளைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பெரிய அளவில் வணிகம் செய்து வந்தனர். இவர்கள் பொருள்களை கொண்டு செல்லவும், ஊர் வந்து சேரவும் தங்கள் பகுதிக்கு சென்னையில் இருந்து ரயில் வசதி செய்து தருமாறு ஆங்கிலேய அரசை வலியுறுத்தினர். நாட்டுக்கோட்டை நகரத்தாரின் தீவிர முயற்சியின் பலனாக ஆங்கிலேய அரசின் சவுத் இந்தியன் ரயில் கம்பெனி மூலம் திருவாரூரில் இருந்து  திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டது. 

இந்த ரயில் பாதையில் கடந்த 1902ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாணவ, மாணவியர் சென்று படித்து வந்தனர். இந்த நிலையில் நாடு முழுதும் மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகலரயில் பாதைகளாக மாற்றம் செய்யப்பட்டன. இதேப்போல இந்த வழித்தடத்தில் காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி இடையே 187 கி.மீ தூரமுள்ள மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகலரயில்பாதையாக மாற்ற ரூ.1700 நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2012ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. இதனால் 1902-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ந் தேதி முதல் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயங்கிய ரயில், 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை-திருவாரூா்- காரைக்குடி இடையிலான 187 கி.மீ. தொலைவு கொண்ட ரயில் பாதை, ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட மிகப் பழைமையான ரயில் பாதையாகும். 

1894-இல் மயிலாடுதுறை- முத்துப்பேட்டை, 

1902-இல் முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை, 

1903-இல் பட்டுக்கோட்டை -அறந்தாங்கி, 

1952-இல் அறந்தாங்கி - காரைக்குடி 

இந்திய சுதந்திர காலகட்டத்தில் 50 வருட காலமாக முனையமாக  (Terminal)  அறந்தாங்கி ரயில் நிலையம் இருந்தது குறிப்பிடத்தக்கது 

என படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த மக்களுக்கு இந்த ரயில் சேவை மிகுந்த பயனளித்தது.

இந்நிலையில், அகல ரயில் பாதைப் பணிக்காக, 2006-ஆம் ஆண்டில் மயிலாடுதுறை-காரைக்குடி வரையிலான பாதையில் சென்னைக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், 2012-இல் பட்டுக்கோட்டை- காரைக்குடி, திருவாரூா்-பட்டுக்கோட்டை இடையிலான ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

அறந்தாங்கி ரயில் நிலையம் ‌(ATQ)

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி ரயில் நிலையம் மிகவும் பழமையான ரயில் நிலையம் ஆகும். 100 ஆண்டுகள் பழமை வாயந்த இந்த ரயில் நிலையம் 1903-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அறந்தாங்கி ரயில் நிலையம் திருவாரூர் காரைக்குடி பாதையில் உள்ளது .

காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரையிலான மீட்டர் கேஜ் பயணிகள் இரயில் சேவை 14.03.2012 தேதியும்  திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலான மீட்டர் கேஜ் பயணிகள் இரயில் சேவை 15.10.2012 தேதியிலும் நிறுத்தப்பட்டன.

முதற்கட்டமாக காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை( 74 கிலோமீட்டர்)  அகல இரயில் பாதை அமைக்கப்பட்டு 31.03.2018 ம்தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இரண்டாம் கட்டமாக பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரை (75கிலோமீட்டர்) அகல இரயில் பாதை அமைக்கப்பட்டு 30.03.2019 தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மேற்கண்ட  அகல இரயில் பாதை அமைக்க சுமார் 750 கோடி ரூபாய் இரயில்வே துறையால்  )செலவு செய்யப்பட்டுள்ளது.

அறந்தாங்கி வழியாக 

2019 ஜூன் முதல் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் வகையில் திருவாரூர் -காரைக்குடி - திருவாரூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது 

2022 ஜூன் முதல் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி- எர்ணாகுளம் வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது 

2022 ஆகஸ்ட் முதல் செகந்திராபாத் இராமேஸ்வரம்- செகந்திராபாத் வாரந்திர சிறப்பு  ரயில் இயக்கப்பட்டு வருகிறது 

2023 ஜூன் முதல் தாம்பரம் - செங்கோட்டை தாம்பரம் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது 

இத்தடத்தில் மீட்டர் கேஜ் சமயத்தில் இயங்கிய சென்னைக்கான விரைவு இரயில் சேவை மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரை இயங்கிய அனைத்து பயணிகள் இரயில்களை இயக்கிட திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் பாராளுமன்ற மக்களவை  உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி தலைவர்கள்,  திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி காரைக்குடி இரயில் உபயோகிப்போர் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் ,சமூக அமைப்புகள், வெளிநாட்டில் வாழும் இப்பகுதி மக்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோர் இணைந்து தொடர்ந்து  இரயில்வே அமைச்சர் ,இரயில்வே போர்டு தலைவர் இரயில்வே துறை அதிகாரிகள் அனைவருக்கும் கோரிக்கை வைத்துக்கொண்டு வருகின்றனர். 

தற்போது 01-06-2023 முதல் நிலவரப்படி
திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் உள்ள அறந்தாங்கி வழியாக  4 ஜோடிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன 

*  திருவாரூர் -  காரைக்குடி  - திருவாரூர் 

* எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம்

* செகந்திராபாத் - இராமேஸ்வரம் - செகந்திராபாத்

*  சென்னை தாம்பரம் - செங்கோட்டை - சென்னை தாம்பரம்

PC Credit :   

ACC - (அறந்தாங்கி வர்த்தகம் சங்கம் - Aranthangi Chamber Commerce)

ADRCA - (அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்பார்கள் சங்கம் - Aranthangi Division Rail Consumer Association)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments