சென்னை - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை ரெயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் டெல்லியில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் கன்னியாகுமரி தொகுதி விஜய் வசந்த் MP முன்னிலையில் தமிழ்நாடு நாடார் சங்கம் மனு




டெல்லியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வை கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் முன்னிலையில் தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் தலைமையில் பொதுச்செயலாளர் வி.எல்.சி.ரவி, தலைமை நிலைய செயலாளர் செ.வீரகுமார் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-சென்னை-கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் போதிய ரெயில் சேவை இல்லாமல் சிரமப்படும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை உள்ளிட்ட 15 மாவட்ட மக்களும், புதுச்சேரி மாநில மக்களும் பெரிதும் பயன் அடைவார்கள்.காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களுக்கு நேரடியாக சரக்குகளை அனுப்ப முடியும். வேளாங்கண்ணி, நாகூர், திருச்செந்தூர், உவரி என பல சுற்றுலா ஆன்மிக தளங்களை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தட திட்டத்தை மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments