அறந்தாங்கிக்கு புதிய பேருந்து நிலையம் வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்த ST.ராமச்சந்திரன் MLAஅறந்தாங்கி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் கோரிக்கையை சட்டமன்றத்திலும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் புதுக்கோட்டையில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும்  நான் கலந்து கொண்டு வலியுறுத்தினேன். 

(30.3.23) நடைபெற்ற நகராட்சி நிருவாகம் மானியக் கோரிக்கையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என். நேரு அவர்கள் அறந்தாங்கிக்கு புதிய பேருந்து நிலையம் அறிவித்தார். இந்த மகிழ்சிகரமான அறிவிப்பிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அருமை அண்ணன் தளபதியார் அவர்களுக்கும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என். நேரு அவர்களுக்கும்; அறந்தாங்கி  தொகுதி மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 மேலும் நமது  மாவட்ட அமைச்சர்கள்; மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அண்ணன் திரு.எஸ். ரகுபதி அவர்களுக்கும் மாண்புமிகு சுற்றுச் சூழல் - கால நிலை அமைச்சர் அண்ணன் திரு.சிவ. வீ. மெய்யநாதன் அவர்களுக்கும் நன்றி. எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments