கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில் திடீர் மழை!
கோபாலப்பட்டிணம்  மீமிசல் பகுதியில் மழை பெய்தது.

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கும் அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கோபாலப்பட்டிணம் பகுதிகளில் இன்று மார்ச் 01ம் தேதி புதன்கிழமை அதிகாலை  முதல் மேகமூட்டமாக காணப்பட்டது காலை 6 மணிக்கு மேல் லேசான சாரல் மழை ஒரு மணி நேரம் பெய்தது பின்னர் வெயில் அடிக்க தொடங்கியது
 
மழை காரணமாக சாலைகளில் சில இடங்களில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தற்போது மழை பெய்ததால் கோபாலப்பட்டிணத்தில் எப்போது நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளங்கள் நிறையும் என ஏக்கத்துடன் உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments