ஆர்.புதுப்பட்டினம் சுன்னத் ஜமாத் அறிவித்த சாலை மறியல் போராட்டம் எதிரொலி: ஒரு வருடத்திற்கு மேலாக எரியாத உயர்மின் கோபுர விளக்கை சரி செய்த ஊராட்சி மன்ற நிர்வாகம்!!!ஆர்.புதுப்பட்டினம் சுன்னத் ஜமாத் அறிவித்த சாலை மறியல் போராட்டம் எதிரொலியாக ஒரு வருடத்திற்கு மேலாக எரியாத உயர்மின் கோபுர விளக்கை சரி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற நிர்வாகம் சரி செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டி வருகிற 15.03.2023 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை செக்போஸ்ட் அருகில், R.புதுப்பட்டினம் நுழைவு சாலையில் ஜமாத் தலைவர் பிரியம்.காதர் தலைமையில் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என துண்டு பிரசுரம் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் அதன் எதிரொலியாக கடந்த 09/03/2023 ஆர்.புதுப்பட்டினம் கிராமத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் நேரடியாக ஆய்வில் ஈடுபட்ட நிலையில் பெண்கள் குளிக்கும் பகுதியில் தேங்கி இருந்த குப்பைகளை உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் சரி செய்யப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் உறுதியளித்தனர்.

அதனடிப்படையில் நேற்று 11/03/2023 கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எரியாமல் இருந்த உயர்மின் கோபுர விளக்கை ஊராட்சி மன்ற நிர்வாகம் சரி செய்தது. மேலும் அதை தொடர்ந்து பள்ளிவாசல் குளத்தில் சேதமடைந்து காணப்பட்ட படித்துறை படிகள் மற்றும் குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க பொறியாளர் அளவீடு செய்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்த நிதியினை நேரடியாக நானே பெற்று தருகிறேன் என கூறி இருக்கிறார். அதனடிப்படையில் இன்னும் சில தினங்களில் டெண்டர் விடப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஜமாத் நிர்வாகம் கூறுகையில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகம் உறுதியளித்தபடி சில அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளனர். மேலும் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்பது எங்களுடைய முக்கிய கோரிக்கையாகும். தற்பொழுது நிதி இல்லாத காரணத்தால் அதனை வரக்கூடிய நிதியாண்டில் செய்து தருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்துள்ள நிலையில் வரக்கூடிய 15/03/2023 அன்று அறிவித்துள்ள மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளனர்.

தகவல்: சேக் தாவூத், ஆர்.புதுப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments