தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை…இனி ஜாலி தான் – வானிலை மையம் அறிக்கை!




தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில், இன்று முதல் 16ம் தேதிக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதால் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக நிலவி வருகிறது. இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிவிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு திசை மாறுபாடு காரணமாக வருகிற 14ம் தேதி முதல் 15ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் வருகிற 16ம் தேதி அன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும், சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படுவதுடன், குறைந்தபட்சமாக 23-24 டிகிரி முதல் அதிகபட்சமாக 33-34 டிகிரி செல்சியஸ்‌ வரை வெப்பநிலை நிலவக்கூடும்‌ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் அறிக்கையில் இடம்பெறவில்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments