கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில் நள்ளிரவில் திடீரென குளிர்வித்த கோடை மழை!கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில் நள்ளிரவில் திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த வெயிலின் தாக்கம் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. குளிர்பான கடைகள் பழக்கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இரவில் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் தூங்க முடியாமல் மக்கள் தவித்தனர். இரவு நேரங்களில் மின் விசிறியில் இருந்து வரும் காற்று கூட அனல் காற்றாக தான் வீசியது.இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில் காலையில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. திடீரென இரவு 11.00 மணியளவில் மின்னல் மின்னியது. இதைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இதனால் வெப்பம் ஒரளவு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. சாலைகளில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது மழை பெய்ததால் எப்போது நெடுங்குளம் மற்றும் காட்டுக்குளம் நிறையும் என ஏக்கத்துடன் கோபாலப்பட்டிணம் மக்கள் உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments