பாம்பன் புதிய ரெயில்வே பாலம் திறக்கப்படுவது எப்போது? மதுரை கோட்டத்தில் 85 சதவீதம் மின் மயமாக்கும் பணிகள் நிறைவு மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் தகவல்




புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆனந்த் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை ரெயில்வே கோட்டத்தில் ரெயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் 85 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. ராமநாதபுரம்-ராமேசுவரம், விருதுநகர்- செங்கோட்டை, செங்கோட்டை- புனலூர், மதுரை-போடிநாயக்கனூர் ஆகிய வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. பாம்பன் புதிய ரெயில்வே பால பணியை ஆர்.வி.என்.எல். மேற்கொள்கிறது. ஆசியாவிலேயே முதன்முறையாக லிப்ட் பாலம் இங்கு தான் அமைக்கப்படுகிறது. பணிகள் நிறைவடைந்ததும் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்த பின் புதிய பாலம் எப்போது திறக்கப்படும் என்பதை அவர் தான் முடிவு செய்து அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments