கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி நடத்திய ஆண்டு விழா / சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!






கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி ஆண்டு விழா மற்றும் சான்றிதழ் (தையல் பயிற்சிக்கான) வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் நேற்று 04.03.2023 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி ஆண்டு விழா மற்றும் சான்றிதழ் (தையல் பயிற்சிக்கா) வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டியின் கௌரவ தலைவர் ஹாஜி. S.வருசை முகம்மது, தலைவர் M.பாவா மரைக்காயர், பொருளாளர் A.முகம்மது காசிம் மற்றும் ஆலோசனை உறுப்பினர்கள் A.அலி அக்பர், S.முகம்மது முனோபர், M.அபுபக்கர் சித்தீக், A.முகம்மது நூருல்லாஹ் ஆகியோர் தலைமை வகித்தனர். முஸ்லீம் சுன்னத்வல் ஜமாஅத் தலைவர் OSM.முகம்மது அலி ஜின்னா, ASM.செய்யது முகம்மது, துணைத்தலைவர் MKR.முகமது மீராசா, செயலாளர் A.ராஜா முகம்மது, இணைச்செயலாளர் M.கலந்தர் நெய்னா முகமது, துணைச்செயலாளர் E.சாகுல் ஹமீது, பொருளாளர் KM.முகமது உசேன் மற்றும் முஸ்லீம் சுன்னத்வல் ஜமாஅத் கமிட்டியாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவின் தொடக்க நிகழ்வாக மௌலவி அல்ஹாபிழ். A.ரியாழ் முஹம்மது அல்குத்ஸி அவர்கள் கிராஅத் ஓதினார். ஆலோசனைக் குழு உறுப்பினர் S.முகம்மது இபுராகிம் வரவேற்புரையாற்றினார். 

அதனை தொடர்ந்து தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

பின்னர் பைத்தூல் மால் செயல்பாடுகள் குறித்து ஆவண படம் திரையிடப்பட்டது. மேலும் பைத்தூல் மாலுக்கு உதவி செய்து வருபவர்களுக்கு உதவும் கரங்கள் விருது வழங்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து இளம் பாரதி.J.சுல்தானா பர்வீன் M.Com., சிறப்புரை நிகழ்த்தினார். 

இந்நிகழ்வில் கீழ்கண்ட முக்கிய மூன்று முக்கிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

1.அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இஸ்லாமிய ஜமாத்தை நிர்வகிக்கும் ஊர்களில் புதிதாக பைத்துல்மால் அமைப்பு தொடங்குவதற்கும், ஏற்கனவே துவங்கியுள்ள பைத்துல்மால்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உரிய பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு அளித்து இஸ்லாமிய சமூக மக்களின் வாழ்வில் வட்டி இல்லமலும், வறுமை இல்லாமலும் வாழ வழி வகை செய்ய இந்த ஆண்டு விழா நிகழ்ச்சி மூலம் தீர்மானம் நிறைவேற்றம்.

2.கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டியில் தற்பொழுது நடைபெற்று வரும் வட்டியில்லா கடன் ஒரு நபருக்கு ஒரு பவுனுக்கு ரூ.25 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் அதிக பட்சமாக இரண்டு பவுனுக்கு ரூ.60 ஆயிரம் வரை கொடுத்து உதவுவது என்று இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

3.2023-ஆம் ஆண்டு கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டியின் இருப்பு தொகை ரூ.30 லட்சமாக உயர்த்துவதற்கு முயற்சி செய்து அதன் மூலம் கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வாழும் நபர்களுக்கு புதிதாக தொழில் தொடங்க தேவையான நிதியை கள ஆய்வு செய்து கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஆலோசனை மூலம் ஆலோசனை செய்து  உரிய நிதியை வட்டியில்லா கடனாக வழங்க இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
 
நிகழ்ச்சியை S.முகம்மது இபுராகிம் தொகுத்து வழங்கினார். இறுதி நிகழ்வாக கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி செயலாளர் K.முகம்மது அப்துல்லாஹ் நன்றியுரை நிகழ்த்தினார்.



































எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments