திருச்சி-ராமேசுவரம் ரெயில் மானாமதுரையுடன் நிறுத்தம்!தண்டவாள பராமரிப்பு பணிக்காக திருச்சி-ராமேசுவரம் ரெயில் மானாமதுரையுடன் நிறுத்தப்படுகிறது.

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட ராமநாதபுரம்-மானாமதுரை இடையேயான ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மண்டபம் வரை இயக்கப்பட்டு, அங்கிருந்து ரெயில்வே நிர்வாகம் மூலம் பஸ்களில் பயணிகள் ராமேசுவரம் வரை செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், மேற்கண்ட தண்டவாள பராமரிப்பு பணிக்காக திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16849) வருகிற 7-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments