புதுக்கோட்டை மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றும் தாசில்தார்கள் மற்றும் தாசில்தார் நிலையிலான பதவியிடங்களில் பணியாற்றும் 29 பேரை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் அவர்களுக்கு பணியிட மாற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக மேலாளராக பணியாற்றிய வந்த விஸ்வநாதன், ஆலங்குடி தாசில்தாராகவும், அறந்தாங்கி ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ரமேஷ், இலுப்பூர் தாசில்தாராகவும், புதுக்கோட்டை காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட தனி தாசில்தார் காமராசு, கந்தர்வகோட்டை தாசில்தாராகவும், புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் புவியரசன், திருமயம் தாசில்தாராகவும், புதுக்கோட்டை ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் ஜமுனா, புதுக்கோட்டை காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருமயம் தாசில்தார்

இதேபோல் இலுப்பூர் தாசில்தார் வெள்ளைச்சாமி, பொன்னமராவதி தனி தாசில்தாராகவும், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக தனி தாசில்தார் கருப்பையா, புதுக்கோட்டை நத்தம் நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும், திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி, புதுக்கோட்டை ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தாராகவும், நத்தம் நிலவரி திட்ட தனி தாசில்தார் சுரேஷ், புதுக்கோட்டை முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும், புதுக்கோட்டை முத்திரைத்தாள் தனி தாசில்தார் செல்வவிநாயகம், குளத்தூர் தனி தாசில்தாராகவும், பொன்னமராவதி தனி தாசில்தார் பழனிசாமி, இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் தமிழ்மணி, புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், கேபிள் டி.வி. தனி தாசில்தார் முருகப்பன், புதுக்கோட்டை அலுவலக மேலாளராகவும், புதுக்கோட்டை அலுவலக மேலாளர் சோனைக்கருப்பையா, கலெக்டர் அலுவலக தனி தாசில்தார் தேர்தல் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

ஆலங்குடி தாசில்தார்

தேர்தல் பிரிவு தனி தாசில்தார் கலைமணி, புதுக்கோட்டை அலுவலக மேலாளராகவும் (கலால்), கலால் அலுவலக மேலாளர் மனோகரன், புதுக்கோட்டை தனி தாசில்தாராகவும், தனிதாசில்தார் பொன்மலர், அகதிகள் நல தனி தாசில்தாராகவும், கந்தர்வகோட்டை தாசில்தார் ராஜேஸ்வரி, ஆலங்குடி தனி தாசில்தாராகவும், குளத்தூர் தனி தாசில்தார் சதீஷ் சரவணகுமார், விராலிமலை தனி தாசில்தாராகவும், அகதிகள் நல தனி தாசில்தார் சரவணன், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட தனி தாசில்தாராகவும், ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, கலெக்டர் அலுவலகம் நிதியில் அலுவலக மேலாளராகவும், ஆலங்குடி தனி தாசில்தார் யோகேஸ்வரன், அறந்தாங்கி தனி தாசில்தாராகவும், புதுக்கோட்டை நில மெடுப்பு தனி தாசில்தார் ஜெயபாரதி, கோட்ட கலால் அலுவலராகவும், கோட்ட கலால் அலுவலர் கண்ணா கருப்பையா, நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், விராலிமலை தனி தாசில்தார் வளர்மதி, கேபிள் டி.வி. தனி தாசில்தாராகவும், அறந்தாங்கி வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் மார்டின் லூதா்கிங், ஆவுடையார்கோவில் தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாக நலன் கருதி...

இதேபோல் ஆவுடையார்கோவில் தாசில்தார் வில்லியம் மோசஸ், அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலராகவும், அறந்தாங்கி தனி தாசில்தார் பவானி, அறந்தாங்கி வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலர் பரணி, அறந்தாங்கி தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த பணியிட மாற்றம் குறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், நிர்வாக நலன் கருதி இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், வழக்கமான பணியிட மாறுதல் தான் என தெரிவித்தனர். இந்த அதிரடி நடவடிக்கையால் வருவாய்த்துறை வட்டாரத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments