கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் தண்ணீர் வராததால் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!


கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் பல நாட்களாக தண்ணீர் வராததால் பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் வரவில்லை. குளங்களிலும் தண்ணீர் இல்லாததால் அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் தண்ணீர் வராததால், ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இன்று  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு  வருகை தந்த  ஊராட்சிமன்ற அலுவலர்  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.மக்கள் அதிகமாக கொதித்தெழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த  போலீசார் அங்கு வந்து பெண்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.மோட்டார் வேலை பார்த்து விட்டதாகவும் இன்று மாலை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் மற்றும் ஊராட்சி துறையினர் உறுதி அளித்ததால் பொது மக்கள் கலைந்து சென்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments