திருச்சி விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக தேர்வு புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது
திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இவ்வாறு இயக்கப்படும் விமான நிலையங்களில் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு இடையேயான 28 விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையம் தலைசிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டது இது குறித்து விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டினார் இந்த நிலையில் இதற்கான விருது வழங்கும் விழா நேற்று புதுடில்லியில் நடைபெற்றது இந்த விழாவில் சிறந்த விமான நிலையமாக தேர்வு பெற்ற திருச்சி விமான நிலையத்திற்கு விமான நிலைய ஆணைய குழுவின் தலைவர் சஞ்சீவ் குமார் விருதினை வழங்கினார் இதனை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி பெற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினார்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments