தண்ணீர் திறப்பதில் அலட்சியம்! போராட்டம் நடத்திய மக்கள்!! நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக மக்கள் குமுறல்!!!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் பல நாட்களாக தண்ணீர் வராமல் இருந்து வந்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவியிடம் கூறியும் சரி செய்யப்படாத நிலையில் அப்பகுதி மக்கள் 01.04.23 அன்று காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

தகவல் அறிந்து வந்த  காவல்துறையினர் 01.04.2023 அன்று மாலைக்குள் தண்ணீர் வரும் என்று மக்களிடையே உத்திரவாதம் அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். அதேபோல அன்று  மாலையே தண்ணீரும் வந்தது. இதை பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில்  இத்தனை நாட்களாக வேண்டுமென்றே ஊராட்சி நிர்வாகம் கெடப்பில் போட்டு மக்களை தண்ணீர் இல்லாமல் திண்டாட விட்டதாக மக்கள் தங்களது மன குமுறல்களை தெரிவித்தனர். 


மேலும் மக்கள் போராட்டம் நடத்தினால் தான் ஒவ்வொன்றிற்கும் தீர்வு கிடைக்கும் என்று போனால் நல்ல நிர்வாகத்திற்கு அழகில்லையென்றும், மெத்தனமாக செயல்படும் ஊராட்சி மன்ற நிர்வாகம் இனி வர கூடிய காலங்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு உடனே செவி சாய்த்து  புகார் வந்தால் உடனடியாக அதை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments