காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
காரைக்காலில் கொரோனாவால் பெண் உயிரிழந்ததை அடுத்து பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

 இந்நிலையில், காரைக்காலை சேர்ந்த 35 வயது பெண் கொரோனா தொற்றால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இணை நோய்கள் இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார். 

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணுக்கு இணை நோய்கள் இருந்ததாக புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். 

கொரோனாவால் பெண் ஒருவர் இறந்த நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் உத்தரவிட்டுள்ளார். திரையரங்கு, வணிக வளாகங்கள், மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments