ஆவுடையார்கோவில் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு
ஆவுடையார்கோவில் அருகே கருப்பூர் கிராமத்தில் சாலையோர பனைமரத்தில் விஷவண்டுகள் கூடுக்கட்டி உள்ளன. மேலும் அந்த வழியாக செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரஹ்மான் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீப்பந்தம் மூலம் விஷ வண்டுகளை அழித்தனர். இதனால் கருப்பூர் கிராமமக்கள் நிம்மதி அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments