சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு பொதுமக்கள் ரயில் பயணிகள் மகிழ்ச்சி




திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக தாம்பரம்-செங்கோட்டை இடையே  சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய ரெயில் சேவை

திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில்  மீட்டர் கேஜ் பாதை, அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கி 2018-ம் ஆண்டு முடிவடைந்தது. திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில் மயிலாடுதுறை-காரைக்குடி-மயிலாடுதுறை, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம், செகந்திரபாத்-ராமேசுவரம்-செகந்திரபாத் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் இந்த பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில்  கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என அப்பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதிலும் குறிப்பாக சென்னைக்கு அதிகப்படியான ரெயில் சேவை வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் தாம்பரம்-செங்கோட்டை இடையே சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்தது. 

இந்திய ரெயில் சேவையை நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புதிய ரெயில் சேவையால் திருவாரூர் காரைக்குடி வழித்தடம் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாரம் ஒருமுறை 

வண்டி எண் 20683/20684 தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் 29-05-2024 வரை வாராந்திர சேவையாக தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செங்கோட்டையில் இருந்து திங்கள்கிழமைகளிலும் இயக்கப்படும்.16-04-2023 (ஞாயிற்றுகிழமை) முதல் தாம்பரத்தில் இருந்தும் 17-04-2023 (திங்கள்கிழமை முதல் செங்கோட்டையில் இருந்தும் சேவை துவங்கும்

வாரம் மும்முறை 

வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் வாரத்தில் மும்முறையாக இயக்கப்படும். அதாவது தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் புறப்படும்

நின்று செல்லும் இடங்கள்

தாம்பரம்- செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலானது விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துபேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புகோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலில் 2 அடுக்கு குளிர்சாதன பெட்டி-2, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி -5, முன்பதிவு படுக்கை வசதி பெட்டி-5, முன்பதிவில்லா பெட்டி-3, லக்கேஜ் பெட்டி-2 என ஆகிய பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த புதிய ரெயில் சேவைக்கு திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில் உள்ள ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தினர், வர்த்தக பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட ரெயில் சேவையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு அகல ரெயில் பாதையில் இயக்கப்படுவதாக ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

EAST DELTA SF EXPRESS என்று பெயரை வண்டி எண் 20683 /20684 தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை அதிவிரைவு ரயிலுக்கு சூட்ட வேண்டும் என்பது கடலூர் மயிலாடுதுறை திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி தடத்தில் உள்ள மக்கள் மற்றும் பயணிகள் அனைவரது விருப்பமாய் உள்ளது

தாம்பரம் - செங்கோட்டை ரயிலின் சில சிறப்புகள்.
 
👉 அம்பாசமுத்திரம் அருப்புக்கோட்டை பட்டுக்கோட்டை வழியாக முதன்முறையாக சென்னைக்கு நிரந்தர ரயில். 

👉 2 இரண்டடுக்கு குளிர்சாதனப்பெட்டிகள், 5 எக்கனாமிக் மூன்றடுக்கு குளிர்சாதனப்பெட்டிகள், 5 தூங்கும் வசதி பெட்டிகள், மூன்று முன்பதிவில்லா பெட்டிகள், 2 ஜெனரேட்டர் கார் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

 👉 பெட்டிகள் அனைத்தும் புத்தம் புதிய  ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட எல்எச்பி பெட்டிகள் ஆகும்.

👉 தாம்பரம் - திருவாரூர் இடையே மின்சார இன்ஜினிலும், திருவாரூர் -  செங்கோட்டை இடையே டீசல் இன்ஜினிலும் இயங்கும்.

👉 தாம்பரம் - செங்கோட்டை இரு மார்க்கத்திலும் 13 மணி 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

👉 முதல் முறையாக மதுரை மற்றும் திருச்சி செல்லாமல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்.

👉 தமிழ்நாட்டுக்கு உள்ளேயே பயணிக்கும் நீண்ட தூர ரயில்கள்

1. 12690 சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் 883 கிமீ, சராசரி வேகம் 55 கிமீ, பயண நேரம் 16 மணி நேரம்

2. 16105  சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் 776 கிமீ, சராசரி வேகம் 53 கிமீ, பயண நேரம் 14 மணி 45 நிமிடங்கள் நேரம்

3. 20683  தாம்பரம் - செங்கோட்டை 765 கிமீ, சராசரி வேகம் 55 கிமீ, பயண நேரம் 13 மணி 50 நிமிடங்கள் நேரம்












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

1 Comments

  1. இது போன்று தொலைதூரம் செல்லும் ரயில்களை நேர்வழியில் மட்டுமே இயக்க வேண்டும். சுற்றி செல்வதால் நேரமும் பணமும் தான் விரயம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.