திருவாரூர்- காரைக்குடி எக்ஸ்பிரஸ் 31-05-2023 வரை இனி திங்கட்கிழமைகளிலும் இயங்காது





திருவாரூர் -‌‌ காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரயில்  தற்போது வாரத்தில் 5 நாள்கள்  இயக்கப்பட்டு வருகிறது (சனி ஞாயிறு தவிர) 

06197 திருவாரூர் - காரைக்குடி 

திருவாரூரில் காலை 08:20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், பிற்பகல்  11.45-க்கு காரைக்குடி சென்றடையும். 

06198 காரைக்குடி - திருவாரூர் 

பின்னர், மறுமார்க்கத்தில் அங்கிருந்து மதியம் 04:00 மணிக்கு புறப்பட்டு இரவு 07.30 மணிக்கு திருவாரூர் வந்து சேரும். 

எங்கு எங்கு நின்று செல்லும்?

இந்த ரயில் திருவாரூர், மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளக்கம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை,  ஒட்டாங்காடு , பேராவூரணி, ஆயிங்குடி ,அறந்தாங்கி ,  வளரமாணிக்கம் , பெரியகோட்டை, கண்டனூர் புதுவயல் காரைக்குடி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்..

அட்டவணையில் மாற்றம்

திருவாரூரில் இருந்து காலை 8:20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி வரை இயங்கும் திருவாரூர் காரைக்குடி பயணிகள் ரயில் சனி ஞாயிறுகளில் தற்போது இயங்குவதில்லை. 

மாண்புமிகு பாரத பிரதமர் 08-04-23 அன்று திருவாரூர் காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு ஒரு அதிவக விரைவு ரயில் துவக்கி வைத்தார் அந்த ரயில் ஜூன் மாதம் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டையும் திங்கட்கிழமை செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கும் இயக்கப்பட உள்ளது. திருவாரூர் காரைக்குடி தளத்தில் போதுமான அளவிற்கு கேட்கீப்பர்கள் இல்லை. 

இதனால் எர்ணாகுளம் வேளாங்கண்ணி எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை இயங்குவதால் இங்கு உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதற்காக திருவாரூர் காரைக்குடி பயணிகள் ரயில் சனி ஞாயிறுகளில் இயங்குவதில்லை. 

இப்பொழுது கூடுதலாக தாம்பரம்- செங்கோட்டை அதிவேக விரைவு ரயிலும் இயக்கப்பட உள்ளதால் திருவாரூர்- காரைக்குடி பயணிகள் ரயிலை முழுமையாக கேட் கீப்பர்கள் பணியமர்த்தப்படும் வரை 

31-05-2023 தேதி வரை இனி திங்கட்கிழமைகளிலும் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதை கவனத்தில்  கொண்டு ரயில் பயணிகள் பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


பயணிகள் மற்றும் சீசன் டிக்கெட் பயணிகள் கவனத்திற்கு

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி வண்டி எண் 06197/198 திருவாரூர்-காரைக்குடி-திருவாரூர் ரயில் 31-05-23 வரை  

சனி ஞாயிறு திங்கள், கிழமைகளில் இயங்காது 

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மட்டுமே இயங்கும். 

தாம்பரம் - திருவாரூர்- செங்கோட்டை  அதிவேக விரைவு ரயில் 20683/20684 திருவாரூர் காரைக்குடி தடத்தில் இயங்குவதால் இந்த மாற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது 

எனவே தற்போது மே 31 வரை வாரம் வாரம் திங்கட்கிழமை திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் ரயிலில் செல்லக்கூடிய பயணிகள் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments