தொண்டி ஜெட்டி பாலத்தை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்




இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டி ஜெட்டி பாலத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொண்டி மகாசக்திபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெட்டி பாலம் கட்டபட்டது. மீனவர்கள் மீன்களை இறக்கி வைக்கவும், படகுகளை பாலம் அருகே கட்டி வைக்கவும் பயன்படுத்தபட்டது.

இலங்கையில் உள் நாட்டு போர் நடந்த போது பாதுகாப்பிற்காக தொண்டியில் தங்கியிருந்த கப்பல்படையினர் இப்பாலத்தை பயன்படுத்தினர். இதனால் மீனவர்கள் பயன்படுத்தவில்லை.

பொதுமக்கள் மாலை நேரங்களில் நடந்து சென்று பொழுது போக்கு இடமாக பயன்படுத்தி வந்தனர். பாலம் சேதமடைந்ததால் இடியும் அபாயம் ஏற்பட்டது.

இது குறித்து தொண்டியை சேர்ந்த வக்கீல் கலந்தர்ஆசிக் பாலத்தை சீரமைக்க வேண்டும். பொதுமக்கள் செல்வதை கட்டுபடுத்த வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.

விசாரணையில் நீதிபதிகள் தடுப்புகள் வைத்து எச்சரிக்கை பலகை வைக்க உத்தரவிட்டனர். அதன்படி பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்பு வேலி அமைக்கபட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் பாலம் சீரமைப்பு பணிகள் துவங்கவில்லை.

இது குறித்து தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பீவி கூறுகையில், பாலத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கலெக்டர், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம், மீன் வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கொடுத்துள்ளேன். இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments