பட்டுக்கோட்டையில் இருந்து கருக்காகுறிச்சி வெட்டன் விடுதி வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை




பட்டுக்கோட்டையில் இருந்து கருக்காகுறிச்சி வெட்டன் விடுதி வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அரசு பஸ் இயக்க வேண்டும்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி கடைவீதி, செருவாவிடுதி வடபாதி, ஈச்சன் விடுதி, புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி, வெட்டன்விடுதி வழியாக புதுக்கோட்டை வரை அரசு பஸ் இயக்க வேண்டும். மேற்கண்ட கிராம பகுதிகள் அனைத்தும் விவசாயம் சார்ந்த பகுதிகளாக உள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்கள் முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு ஆவணம் கைகாட்டி, திருச்சிற்றம்பலம், ஆலங்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு வந்து தான் பிற முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

நடவடிக்கை

இதனால் தேவையற்ற காலவிரையமும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. எனவே இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையினை ஏற்று மேற்படி வழித்தடத்தில் அரசு பஸ்சை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments