மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அவர்கள் தலைமை தாங்கினார்.

மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து தேர்வு எழுத வைக்கும் செயல்பாட்டில்  குழு அமைத்து பொது தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிவதற்கான வழிமுறைகளை விவாதிக்கப்பட்டது.

மேலும் பொது தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் துணை தேர்வு எழுதுவதற்கான ஆலோசனைகளை வழங்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 துணை தேர்வு குறித்த மாணவர்களின் பெற்றோர்களின் சந்தேகங்களை மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள 14 41 7 என்ற இலவச உதவி மைய என்னை பயன்படுத்தலாம் என்ற விழிப்புணர்வையும் பற்றி தெரிவிக்கப்பட்டது.

 பள்ளி அளவில் சிறப்பு பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டு பாட ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள்  வழங்குவது என
 கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு துணைத் தேர்வு முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஐந்து மாணவர்கள் மட்டுமே எழுதாத நிலையில் ஐந்து மாணவர்களையும் துணை தேர்வில் எழுதுவதற்கு ஈடுபாடு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் முடிவில் ஆசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments