ஜெகதாப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து காரும் நேருக்கு நேர் மோதி விபத்துஜெகதாப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஜெகதாப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று ஏப்ரல் 14 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் அரசு பேருந்தும் காரும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. 

காரில் இருந்தவர்கள் லோசான சிறு காயங்களுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பின்னர் சிகிச்சைக்காக  ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் இடையே கவலையும் அச்சமூம் ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments