கோடியக்கரையில், நீரிலும், நிலத்திலும் செல்லும் ரோவர் கிராப்ட் கப்பலில் கடற்படையினர் ரோந்து பணி




வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில், நீரிலும், நிலத்திலும் செல்லும் ரோவர் கிராப்ட் கப்பலில் கடற்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ரோவர் கிராப்ட் கப்பல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தங்கம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி செல்லப்படுகிறது. இதை தடுக்க கடலோர காவல் படை போலீசார் மற்றும் கடற்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான நீரிலும், நிலத்திலும் செல்ல கூடிய ரோவர் கிராப்ட் ரோந்து கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரோந்து பணி

தற்போது இலங்கையில் இருந்து அதிக அளவில் அகதிகளாக தமிழகத்திற்கு வருகின்றனர். இதை தடுக்கவும், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காகவும், ரோவர் கிராப்ட் கப்பல் மூலம் கடற்படையினர் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடியக்கரைக்கு மிக அருகில் இலங்கை இருப்பதால் கடல் வழியாக யாராவது வந்து கடற்கரையில் சுற்றித்திரிகிறார்களா? என ரோவர் கிராப்ட் கப்பல் மூலம் கடற்கரையோரங்களில் கடற்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோடியக்கரையில் முகாமிட்டு ரோவர் கிராப்ட் கப்பல் மூலம் ரோந்து பணி நடைபெற்று வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments