திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் மக்கள் அவதிதிருத்துறைப்பூண்டியில் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூடப்படும் ரெயில்வே கேட்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விவசாய தொழிலாளர்கள் விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி. மேலும் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையில் ெரயில்வே கேட் உள்ளது. மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுமக்கள் வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை மற்றும் நாகூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருத்துறைப்பூண்டி வழியாகத்தான் செல்ல வேண்டும். இவ்வாறு செல்லும் பொழுது திருத்துறைப்பூண்டியை அடிக்கடி ரயில்கள் கடந்து செல்லும். அப்போதெல்லாம் ரயில்வே கேட் மூடப்படுகிறது.

இதனால் ரெயில்வே கேட்டின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் மிகவும் அவதிப்படுகிறாா்கள்.

குறிப்பாக காலை 6 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளிக்கு ெரயில் செல்கிறது. காலை 9 மணிக்கு மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு ெரயில் செல்கிறது.

காத்திருந்து அவதி

மேலும் வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ெரயில் செல்கிறது. மேலும் ராமேஸ்வரத்திலிருந்து செகந்திராபாத்துக்கு ெரயில் செல்கிறது. தற்போது புதிதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கி வைத்த தாம்பரம் முதல் செங்கோட்டை வரையிலான விரைவு ெரயில் இயக்கப்படுகிறது. இதனால் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி தவிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்தும் திருத்துறைப்பூண்டியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் திருத்துறைப்பூண்டி நகரத்தில் உள்ள பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவருமே மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலில் உள்ளது.

மேம்பாலம் கட்ட வேண்டும்

எனவே திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உடனடியாக ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை சாலையை அகலப்படுத்தி வாகன போக்குவரத்தை விரைவுப்படுத்த சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் மன்னார்குடி வரை வந்துவிட்டது.

அடுத்த கட்டமாக மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையும், அதற்கு அடுத்த கட்டமாக திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் வரை பணிகள் நடக்க உள்ளது. இந்த சாலைகள் அமைக்கப்பட்டால் மேலும் வாகனங்கள் போக்குவரத்து அதிகரிக்கும். காலதாமதம் இன்றி உடனடியாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருத்துறைப்பூண்டியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை வெயில்

இது குறித்து சமூக ஆர்வலர் ரெ.வாசுதேவன் கூறியதாவது:-திருத்துறைப்பூண்டி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து குறிப்பிட்ட இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி ெரயில்வே கேட் மூடப்படுவதே ஆகும்.

வாகனங்கள் வேறு வழியாக செல்ல பாதை இல்லை. அப்படி செல்ல வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி சென்றால்தான் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்ப முடியும்.

மேலும் வெளியூர் வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் வயதானவர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால் உடல்நிலை சரியில்லாமல் போகும் சூழல் உள்ளது. குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கிறது. எனவே திருத்துறைப்பூண்டியில் ெரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்.

நடவடிக்ைக

இது குறித்து வக்கீல் ரஜினி கூறியதாவது:-

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலில் சரி செய்ய ஒரே வழி ரெயில்வே மேம்பாலம் கட்டுவது மட்டுமே ஆகும். ெரயில்வே மேம்பாலம் கட்டவில்லை என்றால் வாகன ஓட்டிகள் பெருத்த சிரமத்தை சந்திக்க வேண்டும். அடிக்கடி திருத்துறைப்பூண்டியை கடந்து ெரயில்கள் இயக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் சிரமத்தை தவிர்க்க மாற்று வழியாக ரெயில்வே மேம்பாலம் அமைப்பது மட்டும்தான். எனவே ரெயில்வே மேம்பாலம் கட்ட மத்தியஅரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments