மேமணப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்டமளிப்பு விழா
காரையூர் அருகே மேமணப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் ஆண்டு முப்பெரும் விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கிளாராமேரி வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் நல்ல நாகு, ஆசிரியர் பயிற்றுனர் முகமது ஆசாத், ஊராட்சி மன்ற தலைவர் ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு உறுப்பினர் தலைமை ஆசிரியர் அழகப்பன், மறவாமதுரை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகள் கலை நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது. முடிவில் மரியதாஸ் நன்றி கூறினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்களுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments