மருத்துவ குணம் வாய்ந்த நத்தை விற்பனை மும்முரம்

அதிராம்பட்டினம் பகுதி யில் சீசன் தொடங்கியதால் மருத்துவ குணம் வாய்ந்த நத்தை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரு கிலோ ரூ.250-க்கு விற்றாலும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

சீசன் தொடங்கியது

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட நத்தை சீசன் தொடங்கியுள்ளது. நந்தை பெரும்பாலும் சேறும் மணல் சார்ந்த ஏரி,குளங்களில் நீர் வடியும் நேரங்களில் நீர் சேமித்து கொண்டு பூமிக்கு அடியில் உயிருடன் வாழும்.

மீண்டும் மழைக் காலங்களில் ஈரப்பதமுள்ள தரையில் மேலாக காணப்படும். தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் வெயில் அடித்து வரும் நிலையில் ஏரி, குளங்களில் தண்ணீர் வற்றி இருப்பதால் மகிழங்கோட்டை, மழவேனிற்காடு, கருங்குளம், கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் நத்தை அதிக அளவில் காணப்படுகிறது.

நத்தை விற்பனை மும்முரம்

அதிராம்பட்டினம் பகுதியில் நத்தை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடும்போது நத்தை இறைச்சியில் பல நன்மைகள் உள்ளதாக கூறப்படுகிறது. நத்தை இறைச்சியில் குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு சத்து உள்ளது. நத்தைகளில் கனிமச்சத்து, இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. பெண்களுக்கு உள்ள நீண்ட நாள் இடுப்பு வலியைும், மூலநோயை குணப்படுத்துகிறது.

மருத்துவ குணம் வாய்ந்தது

இந்த மருத்துவ குணம் வாய்ந்த நத்தை கிலோ 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நத்தை கூட்டை உடைத்து இறைச்சி மட்டும் வேண்டுமென்றால் கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவ குணம் கொண்டது என்பதால் மக்கள் நத்தையை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக வியாபாரிகள் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் நத்தை பிடிக்கும் பணியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments