ஆர்.டி.இ மூலம் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி; விண்ணப்பிப்பது எப்போது? எங்கே?
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – தனியார் பள்ளிகள் இயக்குனரகம்

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை (RTE) சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20ம் தேதி முதல் ஆன்லைனில் பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்க வழிவகை செய்கிறது. இந்தச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள் தங்கள் நுழைவு நிலையில் (எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பு) 25% இடங்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்காக ஒதுக்க வேண்டும். இந்த ஆண்டு 8,000 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 94,000 இடங்கள் RTE ஒதுக்கீட்டில் உள்ளன.

இந்தநிலையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 18 ஆகும். விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான http://rte.tnschools.gov.in/ மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கைக்கு ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் மே 21 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். பள்ளிகளில் உள்ள இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் வந்திருந்தால், மே 23 ஆம் தேதி லாட் (குலுக்கல்) முறை நடத்தப்படும். மே 24 ஆம் தேதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும். மாணவர்கள் மே 29 ஆம் தேதிக்குள் பள்ளிகளில் சேர வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது தவிர, பெற்றோர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments