திருத்துறைபூண்டி - திருச்சி இடையே வாராந்திர சிறப்பு முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
திருவாரூர் நீடாமங்கலம் தஞ்சாவூர் வழியாக  திருத்துறைபூண்டி - திருச்சி இடையே வாராந்திர சிறப்பு முன்பதிவில்லா விரைவு ரயில் 21-04-2023 (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
வண்டி எண் 06717 திருத்துறைப்பூண்டி - திருச்சி வாரந்திர DEMU முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்

திருத்துறைப்பூண்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 5-45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருச்சியில் வந்து சேரும் 

வண்டி எண் : 06718 திருச்சி - திருத்துறைபூண்டி வாரந்திர DEMU முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்

திருச்சியில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7-30 மணி புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருத்துறைப்பூண்டி வந்து சேரும் 

நிற்கும் இடங்கள் :-

திருநெல்லிக்காவல்
திருவாரூர் சந்திப்பு
கொரடாச்சேரி
நீடாமங்கலம் சந்திப்பு
தஞ்சாவூர் சந்திப்பு
பூதலூர்
திருவெறும்பூர்

குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயன் அடையுங்கள்

நன்றி : ஆலத்தம்பாடி வெங்கடேசன்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments