ரேஷன் கடையில் பொருளே வாங்காமல் எஸ்.எம்.எஸ் வருகிறதா? கடும் எச்சரிக்கை விடுத்த அரசு




        சில நியாயவிலைக் கடைகளில் வாங்காத பொருட்கள் அல்லது வாங்கியதை விட கூடுதல் அளவில் வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருகிறது என்று புகார்கள் எழுந்துள்ளது.

ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கும் பில் போடுதல், அல்லது வாங்காத பொருட்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

கூட்டுறவு சங்க பதிவாளர் அனைத்து மண்டலா பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அறிவித்திருக்கிறார். அதில் அவர் ரேஷன் கடை பணியாளர்கள் மீது ஏழப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


சில நியாயவிலைக் கடைகளில் வாங்காத பொருட்கள் அல்லது வாங்கியதை விட கூடுதல் அளவில் வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருகிறது என்று புகார்கள் எழுந்துள்ளது.

அவ்வாறு கூடுதலாக பில் போடப்பட்ட பொருட்களை சேமித்து, பின்னர் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுபோல் மீண்டும் தகவல் வெளியானால், சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments