கோட்டைப்பட்டினம் பகுதியில் போலி டாக்டர்கள் 3 பேர் கைது


கோட்டைப்பட்டினம் பகுதியில் போலி டாக்டர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் போலி டாக்டர்கள் அதிகமாக இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், தனிப்படை போலீசார் கோட்டைப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டைப்பட்டினத்தில் போலி டாக்டராக செயல்பட்டு வந்ததாக சுப்பிரமணியன் (வயது 54), வீரையா (50), அம்பலவாநேந்தல் பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் (50) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

3 பேர் கைது

இதையடுத்து 3 பேரையும், கோட்டைப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில், அவர்கள் 3 பேரும் அப்பகுதியில் 2 வருடங்களாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேர் சிறையில் அடைக்கப் பட்டனர்.
 
கோட்டைப்பட்டினம் பகுதியில் 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் உடல்நலக்குறைவால் சுந்தரராஜன் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments