கொல்லம், தென்காசி, விருதுநகர் , மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர் வழியாக செல்லும் எர்ணாகுளம்  - வேளாங்கண்ணி - எர்ணாகுளம்  வாராந்திர சிறப்பு ரயில் சேவை இந்த வாரம் இரு மார்க்கத்திலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது .
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி (வண்டி எண்:06035)  வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 01.10 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.  
வேளாங்கண்ணி- எர்ணாகுளம்
வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06036) இடையே மறுமார்க்கத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது .
எர்ணாகுளம் -  வேளாங்கண்ணி - வேளாங்கண்ணி ரயில் இந்த வாரம் இரு மார்க்கத்திலும் முழுமையாக ரத்து
எர்ணாகுளம் - கொல்லம் ரயில் பாதையில் நடைபெற உள்ள இருப்புபாதை பராமரிப்பு பணிகள் காரணமாக 
நாளை ஏப்ரல் 29 சனிக்கிழமை எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட வேண்டிய வண்டி எண் : 06035 ரயிலும் 
நாளை மறுநாள் ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணியில்  இருந்து புறப்பட்ட வேண்டிய வண்டி எண் : 06036 ரயிலும் 
இந்த வாரம் இரு மார்க்கத்திலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் 
இந்த ரயிலில் பயணம் செய்ய முடிவு செய்தவர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள்..
அடுத்த வாரம்  முதல் வாரத்திர ரயில் சேவைகள் இருமார்க்கத்திலும் வழக்கம் போல  இயங்கும்...  இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
குறிப்பு :  ஏப்ரல் 27  வியாழக்கிழமை வேளாங்கண்ணி எர்ணாகுளம் வாரந்திர ரயில் சேவை நீட்டிப்பு சம்பந்தமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி (வண்டி எண்:06035) இந்த வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை பகல் 01.10 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.  வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவைகள் கூடுதலாக வருகிற மே 06ந்தேதி முதல் மே   27ந்தேதி வரை  சனிக்கிழமைகளில் இயக்கப்படும்
வேளாங்கண்ணி- எர்ணாகுளம்
வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06036) இடையே மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.  வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவைகள், கூடுதலாக வருகிற மே 07ந்தேதி முதல் மே 28ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்
எங்கெங்கு நின்று செல்லும்?
இந்த வாரந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 
கோட்டையம், 
செங்கனாசேரி, 
திர்வல்லா, 
செங்கனூர்,
மவெலிகரா, 
காயங்குளம், 
கருநாகப்பள்ளி, 
சாஸ்தன்கோட்டா, 
கொல்லம், 
குந்தரா, 
கொட்டாரகர, 
புணலூர், 
தென்மலை, 
செங்கோட்டை, 
தென்காசி,
கடையநல்லூர், 
சங்கரன்கோவில், 
ராஜபாளையம், 
சிவகாசி, 
விருதுநகர், 
அருப்புக்கோட்டை, 
மானாமதுரை ,
காரைக்குடி, 
அறந்தாங்கி, 
பேராவூரணி, 
பட்டுக்கோட்டை, 
அதிராம்பட்டினம், 
திருத்துறைப்பூண்டி, 
திருவாரூர், 
நாகப்பட்டினம் 
ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.