சவூதி, அமீரகத்தில் தென்பட்ட ஷவ்வால் பிறை.. நாளை வெள்ளிக்கிழமை ஈத் அல் பித்ர் என அதிகாரபூர்வ அமைச்சகம் அறிவிப்பு..!!சவூதி அரேபியாவில் இன்று மாலை ஏப்ரல் 20 வியாழக்கிழமை அன்று ஷவ்வால் பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏப்ரல் 21 (நாளை) ஈத் அல் பித்ர் தினமாக கொண்டாடப்படும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதேபோல் அமீரகத்திலும் பிறை பார்க்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் நாளை ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் பிறை தென்படவில்லை

ஓமானில் ஈத் அல் ஃபித்ரை குறிக்கும் ஷவ்வால் பிறையை இன்று (வியாழக்கிழமை) பார்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று பிறை தென்படவில்லை என ஓமான் நாட்டின் பிறை பார்க்கும் அதிகாரிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 

தமிழகத்தில் ஷவ்வால் மாதம் பற்றிய அறிவிப்பு. 

பிறை தேட வேண்டிய நாளான 20.04.2023 வியாழக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரமலான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 21.04.2023 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும் 22.04.2023 சனிக்கிழமை நோன்புப் பெருநாள்  என்பதையும்  தெரியப்படுத்திக் கொள்கிறோம். என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments