GPM மீடியா செய்தி எதிரொலி: கோபாலப்பட்டிணம் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த தெரு குழாய் தண்ணீர்!



GPM மீடியா செய்தி எதிரொலியாக கோபாலப்பட்டிணம் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தெரு குழாய் தண்ணீர் வந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் சுமார் 5000-க்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இங்கு சில மாதங்களாக தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது. இங்கு மக்கள் பயன்பாட்டிற்க்கென இரண்டு குளங்கள் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வரும் சூழ்நிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வரும் தெரு குழாய் தண்ணீர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வராததால் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். மேலும் நோன்பு காலமாக இருப்பதால் வெளியில் சென்று தண்ணீர் எடுத்து வருவதற்க்கோ, குளிப்பதற்க்கோ மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து GPM மீடியாவில் கடந்த 04.04.2023 செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் 07.04.2023 இரவு 7.00 மணியளவில் தண்ணீர் வந்தது.

குளத்தில் தண்ணீர் இல்லாமல் இருப்பதாலும், நோன்பு காலமாக இருப்பாதாலும் ஊராட்சி நிர்வாகம் அடிப்படை தேவையான தண்ணீர் பிரச்னை வராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments