சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை நோக்கி புறப்பட்டது துவக்க விழா சிறப்பு ரயில் (Inaugural Special Train)


சென்னையில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக தாம்பரம் செங்கோட்டை ரயிலுக்கு  கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் 

தாம்பரத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு   செங்கோட்டைக்கு காலை 9.30 மணிக்கு செல்லும். தொடக்க விழாவையொட்டி மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சேவை கிடையாது. வருகிற 16-ந் தேதி முதல் வழக்கமான ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.

இந்த ரெயில் ஏப்ரல், மே மாதங்களில் வாரம் ஒரு முறை ரெயிலாகவும், பின்னர் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல்  வாரம் 3 முறை இயக்கப்படும்.

இந்த ரயில் சென்னை தாம்பரத்தில் இருந்து     
விழுப்புரம் திரிப்பாதிரிபூலியூர் 
(கடலூர்)  மயிலாடுதுறை திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை  அறந்தாங்கி காரைக்குடி அருப்புக்கோட்டை விருதுநகர் திருநெல்வேலி சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் பாவூர்சத்திரம் தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும். 

அட்டவணைப்படி ஏப்ரல் 08 & ஏப்ரல் 09 முதல் முறையே திருவாரூர் (11.55 PM), திருத்துறைப்பூண்டி (12.48 AM), முத்துப்பேட்டை (01.15 AM), 
பட்டுக்கோட்டை (01.40 AM), 
அறந்தாங்கி (02.36 AM), 
காரைக்குடி (03.10 AM) 

மணிக்கு வரும்  எதிர்பார்க்கப்படுகிறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments