புதுக்கோட்டை மாவட்டத்தை இரண்டாக பிரித்து அறந்தாங்கியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் - அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமசந்திரன் MLA கோரிக்கை 


புதுக்கோட்டை மாவட்டத்தை இரண்டாக பிரித்து அறந்தாங்கியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பேரவையில் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர், சுற்றுச்சூழல், வனம் ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அறந்தாங்கி எஸ்.டி.ராமச் சந்திரன் (காங்கிரஸ்) பேசியதாவது:

அறந்தாங்கி தொகுதி யில் உள்ள மணமேல்குடி தாலுகா பெருமருதூரில் உள்ள விவசாயிகள் அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஆவுடையார்கோயில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் விவசாயிகள் சிரமப் படுவதால் ஆவுடையார் கோயிலில் இருந்து பிரித்து பெருமருதூரை சுற்றியுள்ள விவசாயிகள் பயனடையும் விதத்தில் பெருமரு தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க வேண்டும். 

மணமேல்குடி தாலுகா அம்மாபட்டினத்தை தனி
வருவாய் கிராமமாக உருவாக்கவேண்டும். 

திருவாசகத்தை எழுதிய மாணிக்க வாசகரால் கட்டப்பட்ட திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயிலில் உள்ள சிவன் கோயில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில். பெருமைமிக்க அழகிய சிற்பங்கள் நிறைந்த கோயிலாகும். இங்கு ஆன்மிக சுற்றுப்பய ணம் மேற்கொள்வோரும் மேலும் பல மாநிலங்களில் இருந்து இங்கு வருபவர்க ளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இத்திருத்தலத்தை ஆன்மிக சுற்றுலா தலமாக அறிவித்து, இங்கு வருவோருக்கு தங்கும் விடுதி வசதி உள்பட வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும்.

அறந்தாங்கி தொகுதியில் பெரும்பான்மையான விவசாய நிலங்கள் மழையை நம்பி ஏரி பாசனத்தால் மட்டுமே விவசாயம்  மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் உள்ளது. அறந்தாங்கி தொகுதியில் பொதுப்பணி துறையின் கீழ் உள்ள 317 ஏரிகளையும் புனரமைத்து தரவேண்டும். அறந்தாங்கி நகரில் உள்ள காவல் நிலையத்தை
யமாக தரம் மேம்படுத்த வேண்டும். 

ஆவுடையார் கோயில் வட்டார மருத்துவமனை கட்டிடம் பழுதடைந்துள்ளதால், கழிப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும். 

அறந்தாங் கியில் உள்ள அண்ணா மணிமண்டபம் பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே இங்கு புதிய அண்ணா மணிமண்டபம் கட்டித்தர வேண்டும். 

மணமேல்குடியில் அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை புதிதாக நிறுவவேண்டும். மணமேல்குடி கோடியக்கரையை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும். வேண்டும். 

அறந்தாங்கி நகரில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும்.
தொகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதத்தில் அறந்தாங்கி நகரில் ஒருங் கிணைந்த விளையாட்டு திடலும் விளையாட்டு போட்டிகள் நடத்த ஒரு உள் விளையாட்டு அரங்கமும் புதிதாக அமைக்க உருவாக்க வேண்டும்.

பெருநாவலூரில் உள்ள அரசு கலைக் 
கல்லூரிக்கு சுற்றுச்சுவர், கழிப்பறை வசதி, லேபாரட்டரி மற்றும் புதிய வகுப்பறைகள் கட்டித் தரவும், புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும் 
வேண்டும். 

ஆவுடையார்கோயில் ஒன்றியம், குன்னூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை நடுநிலை பள்ளியாகவும், 
ஆவுடையார்கோயில் ஒன்றியம் ஒக்கூரில் உள்ள அரசு உயர்நிலைப பள்ளியை மேல்நிலை பள்ளியாகவும், அறந்தாங்கி ஒன்றியம், பெருங்காடு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலை பள்ளியாகவும் நடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தி  தர வேண்டும் 

தமிழகத்தில் இரண்டு மூன்று தொகுதிகளை கொண்ட மாவட்டங்கள் பல உள்ளன. 

அதே போல், வருங்காலத்தில் மாவட்டங்கள் இரண் டாக பிரிக்கப்படும்போது 6 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தை இரண்டாக பிரித்து அறந்தாங்கியை மாவட்ட தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் 

இவ்வாறு அவர் பேசினார்..

நன்றி : தினகரன் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments