திருவாரூர் - காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 01 வியாழன் முதல் வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் - அதிகாரபூர்வ அட்டவணை வெளியிட்டது தெற்கு ரயில்வே



 


திருவாரூர் - காரைக்குடி  எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 01 வியாழன் முதல் வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது 

திருவாரூர் - காரைக்குடி- திருவாரூர் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 06197/06198) வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என 4 நாட்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 1-ம் தேதி முதல் திங்கள்கிழமையும் சேர்த்து மொத்தம் 5 நாட்கள் இயக்கப்படும். 




06197 திருவாரூர் - காரைக்குடி 

வண்டி எண்-06197  திருவாரூரில் காலை 08:20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், பிற்பகல் காலை.11.45-க்கு காரைக்குடி சென்றடையும். 

06198 காரைக்குடி - திருவாரூர் 

பின்னர்,  அங்கிருந்து மதியம் 04:00 மணிக்கு புறப்பட்டு இரவு 07.30 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.

எங்கு எங்கு நின்று செல்லும்

இந்த ரயில் திருவாரூர், மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளக்கம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை,  ஒட்டாங்காடு , பேராவூரணி, ஆயிங்குடி ,அறந்தாங்கி ,  வளரமாணிக்கம் , பெரியகோட்டை, கண்டனூர் புதுவயல் காரைக்குடி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்..

PC Credit: Iliyas Thiruvarur 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments