தேவகோட்டையில் மகனின் கல்லூரிக் கட்டணத்தை தவறவிட்ட தாய்: எடுத்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மகன் கல்லூரிக்கு செல்லுத்த வேண்டிய ரூ.62,000-ஐ தவறவிட்டு தாய் தவித்த நிலையில், அதை எடுத்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை பலரும் பாராட்டினர்.
தேவகோட்டை அருகேயுள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபாலன். இவரது மனைவி வள்ளிமயில் (40) கல்லூரியில் படிக்கும் தனது மகன் படிப்பு செலவுக்காக ரூ.62,000-ஐ வங்கியில் செலுத்த ஸ்கூட்டரில் இன்று தேவகோட்டைக்கு வந்தார். அப்போது அவர் பணப்பையை தவறவிட்டார். பணத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் வேதனையில் இருந்தார்.
இந்நிலையில், ஆவரங்காட்டு பகுதியில் அவர் தவறவிட்ட பணப்பையை அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் கீழே கிடந்து எடுத்தார். அதை திறந்து பார்த்தபோது, ரூ.62,430 இருந்தது. இதையடுத்து அந்தப் பணப் பையை தேவகோட்டை நகர இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தார்.
பையில் இருந்த முகவரியில் தொடர்பு கொண்டு, வள்ளிமயிலை காவல் நிலையத்துக்கு வரவழைத்த இன்ஸ்பெக்டர், ஆட்டோ ஓட்டுநர் முன்னிலையில் பணத்தை ஒப்படைத்தார். மேலும் ஆட்டோ ஓட்டுநரின் இந்தச் செயலை பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து இன்ஸ்பெக்டர் கவுரவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.