ரேஷன் கார்டுதாரர்களுக்கு நகல் குடும்ப அட்டை தபால் மூலம் வினியோகம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் `நகல் மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு தபால் மூலம் வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கியது. இதனை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்து புதுக்கோட்டை தலைமை தபால் நிலைய அலுவலர் லலிதாவிடம் வழங்கினார். அதன்பின்னர் கலெக்டர் கவிதாராமு தெரிவித்ததாவது;- ``இத்திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் வட்டத்தில் ஆன்லைன் முறையில் ரூ.45 அரசுக்கணக்கில் செலுத்திய குடும்ப அட்டைதாரர்களுக்கு நகல் குடும்ப அட்டையினை தபால் துறை வாயிலாக அவர்களது இல்லத்திற்கே நேரடியாக தபால் மூலம் அனுப்பும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பித்த 472 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தபால் மூலம் நகல் குடும்ப அட்டை வினியோகிக்கப்படுகிறது. எனவே இந்த சேவையினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்'' என்றார். இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், விற்பனை அலுவலர் நாகநாதன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments