திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் முதன்மைக்கல்வி அதிகாரிகள் மற்றும் அதற்கு இணையான பணியிடங்களில் பணியாற்றும் அதிகாரிகள் 20 பேர் நிர்வாக நலன்கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலமுரளி திருப்பூருக்கும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மு.சிவக்குமார் திருச்சிக்கும், சென்னை தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் எம்.மஞ்சுளா புதுக்கோட்டைக்கும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சே.மணிவண்ணன் பெரம்பலூருக்கும், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ரெ.அறிவழகன் விழுப்புரத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments