ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் எது? என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எந்த எண் இணைக்கப்பட்டது?
ஆதார் அடையாள அட்டையானது, பல்வேறு அரசு நலத்திட்டங்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு முக்கிய அடையாள ஆவணமாக விளங்குகிறது.
ஆதார் அட்டையில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள, ஓ.டி.பி. எனும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் பயன்பாட்டில் உள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கே இந்த ஓ.டி.பி. தகவல் வரும். ஆனால் பொதுமக்களில் பலர், பல்வேறு சிம்கார்டுகளை பயன்படுத்துவதாலும், சில வேளைகளில் ஆதாரில் இணைத்த செல்போன் எண்ணை பயன்படுத்தாமல் விட்டுவிட்டதாலும், ஓ.டி.பி. தகவல் எங்கு செல்லுமோ என்ற கலக்கத்தில் இருப்பது உண்டு. இதற்கு தற்போது தீர்வு காணும் விதமாக ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பொதுமக்களே அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொதுமக்களில் பலர் தங்களது மொபைல் எண்களில் எந்த எண்ணை ஆதாருடன் இணைத்தோம் என்பதை அறியாமல் இருப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு (யு.ஐ.டி.ஏ.ஐ.) தகவல்கள் வந்துள்ளன.
மொபைல் எண் பற்றி உறுதியாக தெரியாததால் ஆதார் தொடர்பான ஓ.டி.பி. எந்த எண்ணுக்கு செல்லுமோ? என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதனை களைய மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் விவரங்களை ஆதாருடன் சரிபார்க்க அடையாள ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது mAadhaar என்கிற செயலி மூலம் ‘மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை சரிபார்க்கவும்' என்ற குறியீட்டின் கீழ் இந்த வசதியை பெறலாம்.
குறிப்பிட்ட மொபைல் எண் இணைக்கப்படாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தெரியவரும். அவர்கள் விரும்பினால், மொபைல் எண்ணைப் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். மொபைல் எண் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டிருந்தால், ‘நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண் ஏற்கனவே எங்கள் பதிவுகளுடன் சரிபார்க்கப்பட்டது' என்ற செய்தி கிடைக்கும்.
எண் நினைவில் இல்லையா?
மொபைல் எண் நினைவில் இல்லை என்றால், பதிவு செய்யும்போது கொடுத்த மொபைலின் கடைசி மூன்று 3 இலக்கங்களை மைஆதார் இணையதளம் அல்லது செயலியில் “சரிபார்க்க” என்ற குறியீட்டில் பார்க்கலாம்.
மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்க விரும்பினால் அல்லது புதுப்பிக்க விரும்பினால், அருகில் உள்ள ஆதார் மையத்துக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.