கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவின் தொடக்க விழா!
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவின் தொடக்க விழா கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி நடுநிலைப் பள்ளியில் தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட  அனைத்து ஊராட்சிக்கு ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவினை கொண்டாடும் விதமாக  கோட்டைப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட மீனவர் காலனி நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் நடத்தும் அறிவியல் ஆயிரம் ஆயிரம் திருவிழா நிகழ்வினை  மணமேல்குடி வட்டார வளமையும் மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்களின் தலைமையில் தொடங்கியது.

 இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு திரு செய்துல் பாருக் முன்னிலை வகித்தார்.

இல்லம் தேடிக் கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இல்லம் தேடிக் கல்வி மைய கருத்தாளர்கள் சண்முகப்பிரியா ஜெனிட்டா  எளிய அறிவியல் சோதனைகள், எண் கணித விளையாட்டுகள், அறிவியல் அற்புதங்கள், உள்ளூர் வளங்களை பயன்படுத்தி  வரைபடங்கள்  வரைதல், ஆடலும் பாடலும், கைத்திறனும் கற்பனையும், போன்ற அறிவியல் சோதனைகள் செய்து காட்டினார்கள்.

இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்ச்சாமி அங்கையர்கன்னி மற்றும் பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments