மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் நீரில் மூழ்கி 101 பேர் உயிரிழப்பு: கோடை விடுமுறையில் நீர்நிலைகளில் பாதுகாப்பாக குளிக்க கலெக்டர் அறிவுறுத்தல்


புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உள்ளது. தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில் ஏரி மற்றும் குளங்களில் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் குளம், ஏரி மற்றும் ஆறு போன்ற நீர்நிலைகளில் அதன் ஆழம் மற்றும் சுழல் தன்மை அறியாமல் குளிக்க சென்று விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, பெற்றோர்கள் தங்களது மேற்பார்வையில் தங்களது குழந்தைகளை தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் நீர் நிலைகளில் குளிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விடுமுறை காலத்தில் வெளியூரிலிருந்து வருபவர்கள் அருகிலுள்ள ஏரி, குளங்களின் ஆழம் மற்றும் ஆபத்து அறியாமல் இறங்குவதை தவிர்க்கும்படி கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments