மீண்டும் ஒரு 96 திரைப்படம் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1970-களில் படித்த மாணவர்களின் சங்கமம்




ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1970-களில் படித்த மாணவர்கள் 96 பட பாணியில் இரண்டு வருட முயற்சிக்குபின் கண்டுபிடித்து இந்த சங்கமத்தை நடத்தி உள்ளார்கள்.

ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1970- ஆம் ஆண்டில் ஒன்றாக படித்த மாணவர்கள் 55 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியானது மிகவும் பழைமையான பள்ளியாகும், இந்த பள்ளியில் 1968, 1969, 1970 ஆகிய ஆண்டுகளில் பத்தாம் வகுப்பில் 80 மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர்.

இந்நிலையில், அந்த மூன்று ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 55- ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றினைந்து தாங்கள் பயின்ற பள்ளியில் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்தி அனைவரையும் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஆசைபட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் படித்த காலத்தில் தொலைபேசி போன்ற தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால், ஒவ்வொருவரும் எங்கு உள்ளனர் என்று தெரியாத நிலையில், பின் பல முயற்சிகளைக் மேற்கொண்டு அதன் பின், அனைவரையும் இரண்டு வருட முயற்சிக்குபின் கண்டுபிடித்து இந்த சங்கமத்தை நடத்தி உள்ளார்கள்.

இதையடுத்து, 55 ஆண்டுகளுக்கு பின் தாங்கள் பயின்ற அரசு மேல்நிலைப் பள்ளியில் துபாய், சென்னை, பெங்களூர், காரைக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து ஒன்றிணைந்து பள்ளிக்காலத்தில் நடந்த சில மகிழ்ச்சியான நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியரை சென்னையில் இருந்து வரவழைத்து அவரை கௌரவ படுத்தியது மட்டுமல்லாமல் தாங்கள் பயின்ற பள்ளிக்கு தேவையான வசதிகளும் செய்து தருவதாக தற்போது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் உறுதி கொடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments