ஆவுடையார்கோவிலில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
ஆவுடையார்கோவில் ஒன்றியம், பாண்டிபத்திரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.4 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பெண்கள் கழிவறை மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் கவிப்பிரியா மற்றும் உதவி திட்ட இயக்குனர் (வீடுகள்) ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், பாண்டிபத்திரம் ஊராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் கணக்கெடுக்கப்பட்ட வீடுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், சீனிவாசன், பாண்டிபத்திரம் ஊராட்சி தலைவர் வீரபாண்டியன், ஒன்றிய பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments